உலகின் முதன்மை தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு தேவையான அப்டேட்களை அவ்வப்போது கொடுத்து வருகிறது. அந்த வகையில், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இமேஜ் சர்ச் (IMAGE SEARCH) அம்சத்தை வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதா, தவறாக சித்தரிக்கப்பட்டதா எனக் கண்டறியலாம். மேலே இருக்கும் 3 புள்ளியை கிளிக் செய்து அம்சத்தை பயன்படுத்துக்கொள்ளலாம்.