சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த பரதன், சுரேகா தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 13ஆம் தேதி நடந்த தகராறில், சுரேகாவின் தலைமுடியை பிடித்த பரதன், சுவற்றில் 20 முறைக்கு மேல் அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த அவர், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது சுரேகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் போலீசாரால் கைதுசெய்யப்பட்ட பரதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.