போபாலில் யூனியன் கார்பைடு நச்சுக் கழிவுகளை எரிப்பதை எதிர்த்து பிதாம்பூரைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் இரண்டு இளைஞர்கள் தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ நெருப்பை பற்ற வைத்ததில் திடீரென இருவரும் பற்றியெரிந்தனர். அலறியடித்து ஓடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினார். தற்போது அவர்கள் இருவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.