நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழக்கமான ஜாமின் வழங்கி நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'புஷ்பா 2' படம் வெளியான நாளில் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இடைக்கால ஜாமினில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பு வழங்கியது.