இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மக்களுடன் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.