அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நீதி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி இன்று (ஜன.03) காலை நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதில் போராட்டத்தில் கண்ணகி போல் வேடமிட்டு கையில் சிலம்புடன் ஆக்ரோஷமாக நின்ற உமா என்ற நாடக கலைஞர், கைதின் போது கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, நெல்லையில் இருந்து நாட்டுப்புற கலைஞர்களை போராட்டத்திற்கு அழைத்து வந்தது அம்பலமாகியுள்ளது.