பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி இன்று (ஜன.03) தொடங்கியுள்ள நிலையில், 4 நாட்களுக்குள் அனைவருக்கும் டோக்கன் தயார்நிலையில் இருக்க வேண்டும் என ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் என சுமார் 2.20 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ஜன.09ம் தேதி வழங்கப்பட உள்ளது.