ஈரோடு: 5 நாட்கள் நடந்த அறிவியல் திருவிழா

50பார்த்தது
ஈரோடு: 5 நாட்கள் நடந்த அறிவியல் திருவிழா
நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 நாட்கள் நடந்த அறிவியல் திருவிழா ஈரோடு, நந்தா கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில், உயிரியல் தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல், கணிதத் துறைகள் சார்பில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் 5 நாட்கள் நடத்தப்பட்டது. இந்த அறிவியல் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் தலைமை தாங்கினார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் எஸ். பானுமதி வரவேற்புரையாற்றி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

கல்லூரி முதல்வர் முனைவர் மனோகரன் வரவேற்றார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஏ.எம்.யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன், சென்னை இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தின் முனைவர் எஸ். சிவக்குமார், மைசூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் மோவாசிங் ஆகியோர் பங்கேற்று அறிவியலால் நாடு மற்றும் உலகம் அடைந்த முன்னேற்றம் குறித்தும், தங்களது அறிவியல் ஆராய்ச்சி அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ். திருமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் எஸ். ஆறுமுகம், நிர்வாக அலுவலர் முனைவர் வி.சி. சீனிவாசன் பங்கேற்று பேசினர்.

தொடர்புடைய செய்தி