மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் தனது மனைவி அதிகமாக பேசுவது பிடிக்காததால், அவரது கணவர் விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் அந்தப் பெண் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், கணவரின் குடும்பத்தையும், குழந்தையையும் கவனித்துக்கொள்ள வேண்டுமென கணவரின் குடும்பத்தினர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.