குன்னத்தூரில் மனுக்கொடுத்த ஒரு மணி நேரத்தில் தீர்வு.

76பார்த்தது
குன்னத்தூரில் மனுக்கொடுத்த ஒரு மணி நேரத்தில் தீர்வு.
குன்னத்தூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனு கொடுத்த ஒரு மணி நேரத்தில் பயனாளிகளுக்கு தீர்வு காணப்பட்டது.

குன்னத்தூர், செட்டிகுட்டை பகுதியில் உள்ள ஒரு பயனாளி மின் பெயர் மாற்றம் வேண்டி நீண்ட நாட்களாக காத்திருந்தார். நேற்று நடைபெற்ற முகாமில் பெயர் மாற்றம் குறித்த மனுவை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் உதவி மின் பொறியாளர் தங்கவேல், வணிக ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோரிடம் மனு அளித்தார். மனு கொடுத்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நகர துணைச் செயலாளர் கண்ணன், வட்டார காங்கிரஸ் தலைவர் சர்வேஸ்வரன், பொதுமக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி