ஈரோடு கிழக்கு: வாக்குச்சாவடி மையங்களில் சுகாதாரப் பணிகள்

63பார்த்தது
ஈரோடு கிழக்கு: வாக்குச்சாவடி மையங்களில் சுகாதாரப் பணிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதியில், ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 பேர், மூன்றாம் பாலினத்தவர் 37 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கும் எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சி மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில், 237 வாக்குச்சாவடி மையங்களில், சுகாதாரப் பணிகள் தொடங்கியது.

இப்பணிகள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் ஒட்டுதல் அடித்தல், கழிப்பறைகளை சுத்தப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒரிரு நாட்களில் நிறைவடையும் என சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி