ஈரோடு: டிராவல்ஸ் வேன் கவிழ்ந்த விபத்து

3631பார்த்தது
ஈரோடு: டிராவல்ஸ் வேன் கவிழ்ந்த விபத்து
ஊத்துக்குளி அருகே உள்ள பல்ல கவுண்டம்பாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து 20. பேர் காயமடைந்தனர்.   திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து ஒரு குடும்பத்தினர் உறவினர்களுடன் பவானியில் உள்ள கூடுதுறைக்கு தனது உறவினர் இறந்தமைக்காக திதி கொடுப்பதற்கு சென்று, திதி கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பி தங்களது ஊரான அவிநாசிக்கு புறப்பட்டு வந்தனர். சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் பாலம் வேலை நடைபெறும் இடத்திற்கு அருகில் சர்வீஸ் ரோட்டில் ட்ராவல்ஸ் வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி டிராவல்ஸ் வாகனம் கவிழ்ந்து.   20 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்களை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.