தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமி ழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கள் இயக்க கள ஒருங்கி ணைப்பாளர் செ. நல்லசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் இரா. சண்முகசுந்தரம், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துவேல், ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் கள்ளச்சாராய, டாஸ்மாக் மதுபான உயிரிழப்புகளை தடுக்க, உடல் நலனை மேம்படுத்தும் தென்னம்பால், பனம்பால் என அழைக்கப்படும் கள்ளை இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். மக்களுக்கு உணவளித்து பசி போக்கும் உழவர்கள் இறந்தால் இழப்பீடு இல்லை. யானை மிதித்து மலைவாழ் மக்கள், விவசா யிகள் இறந்தால் ரூ. 5 லட்சம் மட்டுமே இழப்பீடு கிடைக்கிறது.

காய்ந்த பயிருக்கும், மழை இன்றி அழியும் பயிருக்கும் நிவார ணம் கூட தருவதில்லை. ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந் தவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த தவறான நடைமுறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி