தபால் வாக்குச் சீட்டுகள் கருவூலத்தில் ஒப்படைப்பு

76பார்த்தது
தபால் வாக்குச் சீட்டுகள் கருவூலத்தில் ஒப்படைப்பு
ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மக்கனவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்ப திவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து எடுத்து வரப்பட்டு பாதுகாப்பாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்குப்ப திவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறைகளில் வைக்கப்பட்டுள் ளன.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மொடக்கு றிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 2, 222 வாக்குச்சாவடிகளில் பயன்படுத் தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த இரவே பாதுகாப்பாக ஈரோடுகோட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக் கப்பட்டன.

இதுபோல தபால் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் சட்டப் பேரவை தொகுதி வாரியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தபால் வாக்குச்சீட்டுகளா னது 6 மாதகாலத்துக்கு பாதுகாப்பாக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி