ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி வருகிற 13ம் தேதி காலை 9 மணிக்கு தீர்த்த சங்கரணம், மிருந்து சங்கரணம், அக்னி சங்கரணம், மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், பூதசோதனம், கும்பலங்காரம், கலாகர்சனம், கடகங்கள் யாகசாலை பிரவேசம், மண்டபார்ச்சனை, முதல்கால யாக பூஜை, வேதிகார்ச்சனையும் நடக்கிறது.
14ம் தேதி காலை 8.30 மணிக்கு விசேஷ சந்தி, பூதசுத்தி, இரண்டாம் கால யாக பூஜை, புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல், விமான கலசம் வைத்தல், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மூல விக்ரகங்களுக்கு யத்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடக்கிறது.
முக்கிய நிகழ்வான வருகிற 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி, திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், மகா தீபாராதனையும், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, கோபுர விமானம் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து, காலை 7 மணியில் இருந்து காலை 8.10 மணிக்குள் பரிவார மூர்த்திகள், மூலவர் ஸ்ரீ மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.