ஈரோடு மக்களவைத் தொகுதி  திமுக வேட்பாளர் விவரம்

9195பார்த்தது
ஈரோடு மக்களவைத் தொகுதி  திமுக வேட்பாளர் விவரம்
ஈரோடு: மக்களவை தேர்தல் 2024-க்கான  திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்க ளாக 11 பேர் அறிவிக்க பட்டுள்ளனர்.

ஈரோடு மக்களவை தொகுதி - திமுக வேட்பாளர் விபரம்
பெயர் - கே. இ. பிரகாஷ்
முகவரி - காணியம்பாளையம், சிவகிரி, ஈரோடு.
வயது - 48
கல்வித்தகுதி - இளங்கலை (பொருளாதாரம்)
சமூகம் - இந்து - கொங்கு வேளாளர்
தொழில் - விவசாயம் மற்றும் கெமிக்கல் சார்ந்த தொழில்.

கட்சிப்பதவி - ஈரோடு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்தவர், தற்போது திமுக இளைஞரணியின் மாநில துணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

குடும்பம் - இவரது தந்தை கே. எஸ். ஈஸ்வரமூர்த்தி, திமுகவின் ஆரம்பகால உறுப்பினர். 1977-ம் ஆண்டு முதல் இன்று வரை காணியம்பாளையம் திமுக கிளைச்செயலாளர் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி கோகிலா, மொடக்குறிச்சி ஒன்றிய திமுக கவுன்சிலராக கடந்த 2011-ம் ஆண்டு பதவி வகித்துள்ளார். திமுக வேட்பாளர் கே. இ. பிரகாஷ்க்கு பி. கன்யா, பி. இனியன் என இரு குழந்தைகள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி