எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி - மே 02 முதல் விண்ணப்பம்

62பார்த்தது
எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி - மே 02 முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2024-2025ஆம் கல்வியாண்டில் சேர மே 02 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை மே 02 முதல் மே 20 வரை www.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம். மே 27 ஆம் தேதிக்குள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி