அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

72பார்த்தது
அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தளுக்கான அறிவிப்பாணையை இன்று (மார்ச் 20) இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தலில் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாட்டின் 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அட்டவணையை மார்ச் 16 ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் ஜுன் 4ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்தி