சிவகிரி விற்பனைக் கூடத்தில் ரூ. 13 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

66பார்த்தது
சிவகிரி விற்பனைக் கூடத்தில் ரூ. 13 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 675 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 63.60 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ. 72.60 காசுக்கும், சராசரி விலையாக ரூ. 68.10 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 21,277 கிலோ எடையுள்ள நிலக்கடலைகாய் ரூ. 13 லட்சத்து 69 ஆயிரத்து 557 ரூபாய்க்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி