டி. என். பாளையம் அருகே தோட்டத்தில் ஆடுகள் திருட்டு

79பார்த்தது
டி. என். பாளையம் அருகே தோட்டத்தில் ஆடுகள் திருட்டு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி. என். பாளையத்தை அடுத்த கே. என். பாளையம் தாசாரி ரு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருடையமனைவி வித்த சுசீலா (வயது 50). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார் இவருடைய ஆடுகளை அங்குள்ள தனியார் தோட்டம் அருகே பட் உள்ள பகுதியில் காலையில் மேய்ச்சலுக்கு விடுவதும், பின்னர் மாலையில் தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைப்பதும் வழக்கம்.

இந்தநிலையில் வழக்கம்போல் 8-ந் தேதி மாலை ஆடுகளை தோட்டத்தில் கட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் காலை வந்து பார்த்து உள்ளார். அப்போது அந்த 2 ஆடுகளையும் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி