ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (60). இவர் நேற்று முன்தினம்(செப்.24) மதியம், கோணமூலைப் பகுதியில், கீழ்பவானி வாய்க்காலில் கை, கால் கழுவிக் கொண்டு இருந்தார். அப்போது பாப்பாத்தி எதிர்பாராத விதமாக வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பாப்பாத்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, பாப்பாத்தியின் மகன் முருகன் (47) அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.