கோபியில் மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

76பார்த்தது
கள்ளக்குறிச்சியில் சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை செய்து வருபவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்
அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்
கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஒட்டி தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மொடச்சூர் சந்தைகடை அருகே சோதனையில்ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது
அதனைத் தொடர்ந்து இருவரை பிடித்து விசாரணை செய்ததில் மொடச்சூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சேகர் என்பதும், வடுகபாளையம்புதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பதும் தெரிய வந்தது
தொடர்ந்து அவர்களை கைது செய்த கோபி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் மீண்டும் மொடச்சூர் சந்தைகடை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் மற்றும் கோமதி ஆகியோரை கோபி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி