

ஈரோடு: தமிழக வெற்றி கழகம் வைத்த பட்டாசில் குடிசை தீப்பிடித்தது
ஈரோடு அடுத்த அண்ணாமலைப் பெட்ரோல் பங்க் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைத்து மோர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பந்தல் மூலம் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை துவக்கி வைப்பதற்காக கட்சியினுடைய மாவட்ட செயலாளர் வருகை தர இருந்தார். அவர் வந்ததும் அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி வந்ததும் பட்டாசுகள் வெடித்த போது அருகாமையில் இருந்த சுமை தூக்குவோர் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குடிசையில் பட்டாசுகள் விழுந்துள்ளன. இதனால் சில நொடிகளில் அந்த குடிசை ஆனது வேகமாக பற்றி எரியத் துவங்கியுள்ளது. உடனடியாக அங்கிருந்த தாவர கவிஞர் மற்றும் சுமை தூக்குவோர் அனைவரும் அங்கிருந்து தப்பிய ஓடிய நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நிகழ்வு இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் குடிசையில் இருந்த தீ மற்ற இடங்களுக்கு பரவிய நிலையில் அதனை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினர் அமைத்த நீர்மோர் பந்தல் அமைத்து மோர் வழங்குவதற்கு முன்னதாகவே இந்த விபத்து ஏற்பட்டு சுமை தூக்குவோர் குடிசை பாதிக்கப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.