ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஈரோடு பஸ் நிலையத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான உள்ளூர் தொலைதூர பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் ஈரோடு பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக காட்சியளிக்கும். ஈரோடு பஸ் நிலையத்தில் பூக்கடை செருப்பு கடை முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருப்பதாக ஏற்கனவே புகார் வந்தன. இதேபோல் வணிக வளாகத்தில் உள்ள கடைகளிலும் பொதுமக்கள் செல்லும் பாதையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் புகார் வந்தன.
இதை அடுத்து இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி பணியாளர்கள் பயணிகளை இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு பொருட்களையும் எடுத்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீஸ்சாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.