சுதந்திரப் போராட்ட தியாகி வ. உ. சிதம்பரனாரின் 153 வது ஆண்டு பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஈரோட்டில்,
அமைச்சர் சு. முத்துசாமியின் முகாம் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் சு. முத்துசாமி பங்கேற்று வ. உ. சி. , யின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஈரோடு தொகுதி எம். பி. , கே. இ. பிரகாஷ், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.