தபால் அலுவலகம் 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கிறது. ரூ.5,00,000 முதலீடு செய்தால், ரூ.15,00,000-க்கு மேல் சம்பாதிக்கலாம். தபால் அலுவலகம் 5 வருட FDக்கு 7.5 சதவீத வட்டி அளிக்கிறது. ரூ.5 லட்சத்தை சுழற்சி முறையில், அதாவது 5 வருடத்திற்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் டெபாசிட் செய்தால் 15-வது ஆண்டில் முதிர்வு நேரத்தில், நீங்கள் முதலீடு செய்த ரூ. 5 லட்சத்தில் வட்டியில் இருந்து மட்டும் 10,24,149 ரூபாய் பெறுவீர்கள். மொத்தம் ரூ.15,24,149 கிடைக்கும்.