லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிகமாக பிரதமராக தொடர்வதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக இருந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ, சொந்த கட்சியினர் இடையே ட்ரூடோ மீது கடும் அதிருப்தி நிலவியதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.