HMPV புதிய வைரஸ் அல்ல, அதனால், மக்கள் பீதியடைய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார். மேலும் அவர், "HMPV தொற்று தொடர்பாக நாட்டின் சுகாதார அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு வலையமைப்பு, வளர்ந்து வரும் எந்தவொரு சுகாதார சவாலுக்கும் உடனடியாக பதிலளிக்க தயாராக உள்ளது. இந்த தொற்றால் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்