ஸ்டாலின் பிரதமராக இளங்கோவன் ஆதரவு

50பார்த்தது
திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் எங்கள் தலைவர் ராகுல் காந்தியை நாங்கள் சமமாக பாவிக்கிறோம் எனவே மு க ஸ்டாலின் பிரதமராவதை கூட நான் ஆதரிக்கிறேன் மோடி போன்ற மோசமான தலைவர்கள் பிரதமராக இருக்கும்போது யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் அவர்கள் சிறப்பான ஆட்சித் தருவார்கள் எங்களைப் பொறுத்தவரை ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் மோதி பிரதமராக இருந்தால் அடுத்த தேர்தல் கூட நடக்காது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ வி கே எஸ் இளங்கோவன் கூறினார் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி விபரம் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே ஸ்டாலின் அறிவித்தார் அறிவித்துள்ளார் ஒவ்வொரு முறையும் அதைக் கூற வேண்டிய அவசியம் இல்லை தமிழகத்தைப் பொறுத்தவரை நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம் எனவே ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு எங்களைப் பொருத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக தலைவர் ஸ்டாலின் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் அவர் பிரதமர் ஆனாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனவே ராகுல் காந்தி பிரதமரா ஸ்டாலின் பிரதமரா என்ற கேள்வி எழவாய்ப்பில்லை
இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின்கதாநாயகன் அவர் ஒவ்வொரு நாளும் எட்டுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகப்பெரும் பலமாக உள்ளார்

தொடர்புடைய செய்தி