ஈரான் அதிபர் மரணம்: அமெரிக்கா சர்ச்சை கருத்து

55பார்த்தது
ஈரான் அதிபர் மரணம்: அமெரிக்கா சர்ச்சை கருத்து
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இது குறித்து விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்ராஹிம் ரைசியின் கைகள் ரத்தக் கறை படிந்தது, ஈரானில் நடந்த கொடூரமான பல மனித உரிமை மீறல்கள், வன்முறை சம்பவங்களுக்கு ரைசி தான் பொறுப்பு, ஹமாஸ் உள்ளிட்ட பிராந்திய தீவிரவாதிகளை அவர் ஆதரித்தார். எவ்வாறாயினும் அவருடைய மறைவுக்கு நாங்கள் வருந்துகிறோம். எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்தி