பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளும் சடங்கு

84பார்த்தது
பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளும் சடங்கு
கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் என்ற கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி உள்ளது. சதாசிவர் நினைவு நாளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றுதான் எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயம். பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது பிற சாதியினரை உருள வைப்பதே இந்த சடங்கு. இந்த சடங்கை 2015-ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம் தடை செய்தது. தற்போது அதே சடங்கை மீண்டும் நடத்திக் கொள்ள மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கடந்த மே 18-ம் தேதி இந்த சடங்கு நடந்து முடிந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் விதித்த தடையை ஒரு நீதிபதி நீக்கிய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி