அம்மாபேட்டை அருகே சாலை மறியல்

67பார்த்தது
அம்மாபேட்டை அருகே சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே 100 நாள் வேலை கேட்டு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை யூனியன், பூனாச்சி பஞ்சாயத்தில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், கடந்த 15 நாட்களாக வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டனர். முறையான பதில் இல்லாததால், மாலை, 4 மணிக்கு, அந்தியூர்–அம்மாபேட்டை ரோட்டில் நத்தமேடு பிரிவு என்ற இடத்தில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த எஸ்எஸ்ஐ. , கருப்பணன், பிடிஓ. , ராதமாணி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி