அந்தியூர் தாலுகா அலுவலகத்தை திணறடித்த விவசாயிகள்

58பார்த்தது
அந்தியூர் தாலுகா அலுவலகத்தை திணறடித்த விவசாயிகள்
அந்தியூர் அடுத்த பர்கூர் கிழக்கு மலை தேவர் மலையில் பெய்யும் மழை காட்டாறாக வழுக்குப்பாறை வழியாக வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம் ஏரிக்கு வருகிறது. இதில் வழுக்குப் பாறையில் இருந்து செலம்பூரம்மன் கோவில் பூஞ்சோலை தோட்ட பகுதி பள்ளம் வழியாக ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கனமழையால் செலம்பூரம்மன் கோவில் அருகில் இருந்த பாலமும் பூஞ்சோலை தோட்டம் அருகே இருந்த பள்ளமும் உடைந்து. இதனால் எண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் மழை நீர் கோவிலூர் வழியாக சித்தார் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. 2 ஆண்டுகளாக நீர் வராததால் எண்ணமங்களம் ஏரி நிரம்பவில்லை.

அதே சமயம் பூஞ்சோலை தோட்ட வழியாக வெளியேறும் வெள்ளம் கோவிலூர், குன்னிக்காடு பகுதியில் குடியிருப்புகளில் புகும் அபாயம் உள்ளது. எனவே பூஞ்சாலை தோட்ட பலத்தை சீரமைத்து தருமாறு பகுதி விவசாயிகள் ஓராண்டுக்கு மேல கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் எண்ணமங்கலம் கோவிலைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தியூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து துணை தாசில்தார் பூங்கோதை, நீர்வளத்துறை எஸ்பிஓ ரவிஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் பூஞ்சோலை தோட்ட பள்ளத்தை மண் கொட்டி உயர்த்துவதாகவும், நிதி வந்த பிறகு பள்ளம் மற்றும் பாலம் அமைத்துக் கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் போராட்டத்தை கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி