சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகளை பணி நீக்கம்

81பார்த்தது
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகளை பணி நீக்கம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் ஈரோடு கலெக்டர் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பருவம் தவறிய மழை திடீர் வெள்ளம் கடும் வறட்சி கடும் வெப்பம் உள்ளிட்ட இயற்கை சீரழிவுகளால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் எடுக்கப்படும் மண்ணை விஷமாக்கி உணவை நஞ்சாக்கி, ஆறுகளை மணல் குவாரிகளாகவும், மலைகளை உடைத்தும் தொழிற்பேட்டைகள் என்ற பெயரில் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை சீரழிக்கும் விதமாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டை விளைவித்து வரும் வகையில் பணியாற்றி வருகின்றனர். எனவே அந்த ஆணையத்தின் அலுவலர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்து நேர்மையான அலுவலர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி