அரசுபள்ளிக்கூடங்களில் முதல் நாளிலேயே காலை உணவு வழங்கப்பட்டது

74பார்த்தது
அரசுபள்ளிக்கூடங்களில் முதல் நாளிலேயே காலை உணவு வழங்கப்பட்டது
தமிழக முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்புதிட்டங்களில் ஒன்றாகதிகழ்வது பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம். கடந்த கல்வி ஆண்டில் இந்த திட்டம் அரசு பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்பட்டது. ஏற்கனவே மதிய உணவு வழங்கப் பட்டாலும், அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் பெரும்பா லான குழந்தைகள் காலை நேரத்தில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கூடங்களுக்கு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித் தன. இதனால் குழந்தைகளின் கற்றல் திறன் குறைகிறது. பல பெற்றோர்கள் மிகவும் வருத்தத்துடன் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் நிலையும் இருந்தது. இதை தடுக்கும் வகையில் அரசு தொடக்கப்பள்ளிக் கூடங்களில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு தினமும் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் 8-ம் வகுப்பு வரைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங் கள் திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் காலை உணவு வழங்கப்படுமா? என்ற கேள்வியுடனே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஏற்கனவே காலை உணவு அனுமதிக்கப்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகள் வந்த உடன் வழக்கம்போல காலை உணவு வழங்கப்பட்டது. இதைப்பார்த்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி