குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் 91. 20மி.மீ மழைபதிவு

74பார்த்தது
குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் 91. 20மி.மீ மழைபதிவு
குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் 91. 20 மில்லி மீட்டர் மழை பதிவு
ஈரோடு மாவட்டம், குண்டேரி பள்ளம் அணை பகுதியில் 91. 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெயில் தகித்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு நகரப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நேற்று முன்தினம் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு போதுமான அளவு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 194. 00 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது.
இதில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில்
91. 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி