பவானி அருகே உள்ள ஜம்பை அருகே துருசாம்பாளையத்தை சேர்ந்த செல்வம் மகன் அய்யன்துரை, 30, கட்டட தொழிலாளி. ஜம்பை பகுதி ஆற்றங்கரையில் இவரை கொலை செய்து, சடலத்தை ஆகாயத்தாமரை செடியில் மறைத்து வைக்கப்பட்டது. இது தொடர்பாக அய்யன்துரை நண்பர்களான நான்கு பேரை, பவானி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆற்றங்கரையில் மது குடித்தபோது, கடைசி பெக்கை குடிப்பது யார்? என்பதில் ஏற்பட்ட தகராறில், கொலை செய்யப்பட்டுள்ளார். கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த கார்த்திக், அவருக்கு உதவிய வேல்முருகன், பார்த்திபன் என மூவரை, பவானி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். விசாரணை
க்கு அழைத்து சென்ற சின்னவடமலைபாளையத்தை சேர்ந்த முருகன், சம்பவ இடத்தில் இல்லாததால் அவரை வழக்கில் சேர்க்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.