சூட்கேஸில் பெண் சடலம்.. ரயில் பயணிகள் அதிர்ச்சி

79பார்த்தது
சூட்கேஸில் பெண் சடலம்.. ரயில் பயணிகள் அதிர்ச்சி
பீகார் பாட்னாவில் இருந்து ரயில் ஒன்று கடந்த மே 16ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்டது. இந்த ரயிலின் ஜெனரல் கம்பார்ட் மெண்ட்டில் உள்ள கழிப்பிடம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அதனடியில் ரத்தம் வடிந்துள்ளது. இதனைப் பார்த்த பயணிகள் ரயில்வே போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் இன்று (மே 18) காலை சனார் ரயில் நிலையத்தில் ஏறிய போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில், தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் இருந்துள்ளது. அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி