“மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது” - ராமதாஸ்

77பார்த்தது
“மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது” - ராமதாஸ்
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி தனது 'X' தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி