வீட்டிற்கு வந்த பவன் கல்யாண்.. சர்ப்ரைஸ் கொடுத்த சிரஞ்சீவி..

76பார்த்தது
ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சந்தித்தது. அந்த வகையில், பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்ட பவன்கல்யாண் 70ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், இன்று (ஜூன் 6) பவன் கல்யாண் தனது மூத்த சகோதரர் சிரஞ்சீவியிடம் வாழ்த்து பெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது, பவன் கல்யாணை மலர் மழையால் வரவேற்று சிரஞ்சீ ஆச்சரியமூட்டினர். தொடர்ந்து குடும்பத்தோடு சேர்ந்து கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர்.

நன்றி : புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி