“ராகுலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி”

63பார்த்தது
“ராகுலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி”
மக்களவையில் காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்வு செய்யக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது. மேலும், தமிழக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக செல்வப்பெருந்தகை தகவல் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற ராகுல் காந்தி தயங்குவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி