விடைபெறுகிறார் சுனில் சேத்ரி!

71பார்த்தது
விடைபெறுகிறார் சுனில் சேத்ரி!
இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான சுனில் சேத்ரி இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். ஜூன் 6-ம் தேதி நடைபெற உள்ள குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுவதாக கடந்த மாதம் அவர் அறிவித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணிக்காக சுனில் சேத்ரி அளித்த பங்களிப்பிற்கு அவரை வெற்றியுடன் வழியனுப்ப இந்திய அணி வீரர்களும், கால்பந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை அடித்துள்ள சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி