திடீரென பற்றி எரிந்த ரயில்.. குதித்து ஓடிய பயணிகள்..

57பார்த்தது
பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் பாட்னா - ஜார்கண்ட் செல்லும் பயணிகள் ரயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பயணிகள் கீழே குதித்து தங்களது உயிரை காப்பாற்றினர். இந்த கோர விபத்தில் பல பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி