“I'm Safe” - வைரல் வீடியோவிற்கு கங்கனா விளக்கம்

61பார்த்தது
“I'm Safe” - வைரல் வீடியோவிற்கு கங்கனா விளக்கம்
நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் இதற்கு விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகள் எனக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்து வருகின்றன. முதலில், நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் என் கவலை என்னவென்றால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம், அதை எப்படி கையாள்வது? என்பது தான்” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி