“பங்குச்சந்தை மோசடி” - ராகுல் குற்றச்சாட்டுக்கு பதிலடி

54பார்த்தது
“பங்குச்சந்தை மோசடி” - ராகுல் குற்றச்சாட்டுக்கு பதிலடி
போலியான தேர்தல் கருத்துக்கணிப்பு மூலம் பாஜக பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில், இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “பங்குச் சந்தை தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அச்சம் ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி. 3ஆம் முறை மோடி பிரதமராவதால் ராகுல் காந்தி அச்சம் கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நமது பங்குச் சந்தை மதிப்பு 5 ட்ரில்லியன் டாலர்களை கடந்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி