நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று (ஜன.10) இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.