தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதியும், எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சிக்கும் வகையில் புகைப்படங்களை வாக்காளர்கள் மத்தியில் காட்டி வருவது பலரது கவனத்தை பெற்றுள்ளது. பா.ஜ.க கூட்டணி என்ற மூன்றாம் அணி உருவான போதிலும் தமிழ்நாட்டு அரசியல் களம் தி.மு.க vs அ.தி.மு.க என்றே பயணிப்பதையே இது காட்டுவதாக திராவிட இயக்க ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் தி.மு.க Vs பா.ஜ.க என்பதே அரசியல் களம் என்பது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்தாக உள்ளது.