இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் கட்டப்பட்டு வருகிறது. போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே சுமார் 5 கி.மீ தொலைவுக்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் கட்டப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான வழித்தடம் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தட ரயில்கள் இதில் இயக்கப்படவுள்ளன என சென்னை மெட்ரோ தகவல் அளித்துள்ளது.