பழங்களை வெட்டி அப்படியே பிரிட்ஜில் சேமித்து வைக்கக் கூடாது. நறுக்கிய பழங்களை காற்று புகாத டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைக்க வேண்டும். நறுக்கிய பப்பாளி பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் 6 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும். நறுக்கிய ஆப்பிள் பழங்களை பிரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டுமானால் 4 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும். அன்னாசியை 7 நாள் வரை பிரிட்ஜில் வைக்கலாம்.