குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமதி யாசின் மற்றும் முகமதி ஜுனை ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.